Discoverஎழுநாகாந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன்
காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Update: 2022-12-18
Share

Description

1930 களை அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை பொறுத்தவரையில்  சில சுவாரஸ்யமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகளில் ஜஹவர்லால் நேருவின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது முதலாவது விஜயம் 1931 இலும் இரண்டாவது விஜயம் 1939 இலும் இடம்பெற்றன.  இதற்கு முன் மகாத்மா காந்தி 1927ஆம் ஆண்டு  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மகாத்மா காந்தி அவர்களும் பண்டித நேரு அவர்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கெதிராக மேற்கொண்ட சுதந்திர போராட்டங்கள் காரணமாக உலகப் புகழ் பெற்றிருந்தார்கள்.


1930 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் "டைம்ஸ்" சஞ்சிகை மகாத்மா காந்தியை "உலகின் முதன்மை மனிதன்" என்று பெயரிட்டது. இவர்களது புகழ் இலங்கையிலும் பெரிதாகப் பரவியிருந்தது. இலங்கை எங்கும் இவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பிரதேசங்களில் இவர்களைக் காண பெருந்திரளான மக்கள் கூடினர்.


மகாத்மா காந்தி அவர்களின் இலங்கை வருகையை விட ஜவகர்லால் நேருவின் வருகையே இந்திய தமிழர்களைப் பொறுத்தவரையிலும் தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. நேருவின் முதல் வருகையின்போது அப்போது இலங்கை ,இந்திய காங்கிரசின் தலைவராக செயற்பட்ட ஜோர்ஜ் இ. டி. சில்வா (George E. de Silva) அவர்களும் அவரது பாரியாரான அக்னஸ் அவர்களும் (Agnes De Slva) கண்டியில் வரவேற்பு விருந்தளித்து உபசரித்தனர்.


இக்காலத்தில் இலங்கை வாழ் இந்தியர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு சங்கங்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வந்தன. அத்தகைய சங்கங்களில் ஒன்றுதான் இக்னேஷியஸ் சேவியர் பெரேரா ( I. X.Pereira )  என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சிலோன் இந்திய சங்கம் (சிலோன் இந்தியன் அசோசியேசன்) ஐ. எக்ஸ். பெரேராவும் அவருடைய தந்தையான எப். எக்ஸ். பெரேராவும் 1900 களில் தமிழ்நாடு தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ. எக்ஸ். பெரேரா இலங்கையில் முதல் முறையாக இந்திய வம்சாவழியினர் சார்பில் ஒரு பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.


1931 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஜவகர்லால் நேரு இலங்கை வந்திருந்தார்.  ஜவஹர்லால் நேருவின் தலைமையில் மீண்டும் இந்த சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. அதற்கு ஐக்கிய இலங்கை இந்திய காங்கிரஸ் என்று பெயரிடப்பட்டது .(யுனைட்டட் சிலோன் இந்தியன் காங்கிரஸ் ) அதன் தலைவராக வி .ஆர் . எம் . லட்சுமணன் செட்டியார் தலைவராகவும், அப்துல் அசீஸ் மற்றும் எச்.எம். தேசாய் ஆகியோர் இணைச்செயலாளர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Comments 
loading
In Channel
loading
00:00
00:00
1.0x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Ezhuna